×

ஓசூர் சானமாவு வனத்தில் தஞ்சமடைந்த காட்டு யானை கூட்டத்தை விரட்டும் பணி தீவிரம்

ஓசூர்: ஓசூர் சானமாவு வனத்தில் தஞ்சமடைந்துள்ள காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 கர்நாடக மாநிலத்தில் இருந்து வெளியேறிய 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், கடந்த 10   நாட்களுக்கு முன் சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்தது. இந்த யானைகள் வனத்தையொட்டிய கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை நாசம் செய்து வந்தது. நேற்று இரவு வனத்துறையினர் அங்கிருந்த யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர்.

பட்டாசுகளை வெடிக்க செய்து சானமாவு, அனுமந்தபுரம், சினிகிரிப்பள்ளி, டி.கொத்தப்பள்ளி வனப்பகுதி வழியாக தேன்கனிக்கோட்டை மாரசந்திராம் வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த யானைகள் சினிகிரிப்பள்ளி அருகில் சென்றபோது பொதுமக்கள் பட்டாசு வெடித்தனர்.  இதனால் அந்த யானைகள் திரும்பி மீண்டும் சென்ற வழியிலேயே சானமாவு வனப்பகுதிக்குள் வந்தன. அங்கிருந்து மீண்டும் போடூர்பள்ளம் வனப்பகுதிக்கு செல்லாமல் இருக்க வனத்துறையினர், நான்கு குழுக்களாக பிரிந்து கண்காணித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hosur , Hosur, Wild elephant,
× RELATED குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் மூச்சுச்திணறல்